Developed by - Tamilosai
மக்கள் சேவைக்காக வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதற்கு ஓய்வூதியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
‘ஆளும் தரப்பினரும், எதிர்த்தரப்பினரும் கொள்ளையடித்தவர்கள் தொடர்பாக பேசுகிறார்கள். நாமும் இந்தக் கொள்ளையர்கள் எப்போது பிடிப்பட்டு சிறைக்குச் செல்வார்கள் என்பதை காண ஆவலாக இருக்கின்றோம்.
இலங்கை மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்கள் இருந்தால், அவர்களைச் சிறையில் அடையுங்கள். நாமும் அதனைக் காண மகிழ்ச்சியாகக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையானது, திருமண வீட்டில் கதைக்க வேண்டிய கதையை மரண வீட்டில் கதைத்ததைப் போன்றுதான் காணப்பட்டது.
மிகவும் சவால் மிக்கதொரு காலத்தில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், நிதியமைச்சரின் ஊடாக மக்களுக்கு ஏதேனும் நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.
இந்த வரவு – செலவுத் திட்டமானது, இலங்கையின் பொருளாதாரம் குறித்து அக்கறையில்லாமல் தயாரித்தது போன்றுதான் காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.