தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்கள் எதிர்பார்த்த எதுவும் இல்லாத பட்ஜெட் : ஹக்கீம் கவலை

0 105

கடன் சுமையுடன் இருக்கும் மக்களை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வகையிலேயே வரவு – செலவுத் திட்ட யோசனைகள் அமைந்திருக்கின்றன.

மக்கள் எதிர்பார்த்த எதுவும் இல்லை. அத்துடன் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டம்  தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வரவு – செலவு திட்டத்தில் எதிர்பார்த்த எதுவும் இல்லை. பெரிய கம்பனிகள் மற்றும் வங்கிகளிடம் வரியை அதிகரித்திருக்கின்றது.

வங்கிகள் அதனை வாடிக்கையாளர்களிடம் அறவிடுவது நிச்சயமாகும். இதனால் கடன் சுமையுடன் இருக்கும் வாடிக்கையாளர்கள் மேலும் கடன் சுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடைமுறைகளில் தெளிவில்லாத தன்மை காணப்படுகின்றது.

அதனால் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துப்போகின்றது என்பதை பார்த்துவிட்டுதான் இதுதொடர்பில் மேலதிக விடயங்கள் தெரியவரும்.

அத்துடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழிந்திருக்கும் விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் என்னதான் உத்தரவாதங்களைத் தந்தபோதும் அதனை நாங்கள் நம்பப்போவதில்லை.

கிராமங்கள், பிரதேசங்களின் அபிருவித்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதும் அதற்கான பணத்தை எவ்வாறு அரச வருமானமாக ஈட்டிக்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பில் பலத்த சந்தேகம் இருக்கின்றது.

மேலும் நெருக்கடியான காலகட்டத்தில் இவ்வாறான வரவு – செலவுத் திட்டம் மூலம் தெளிவின்மை காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.