தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்கள் இடையே முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

0 100

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்காத அரசாங்கம், அருட்தந்தை சிறில் காமினியைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துள்ளது. அரசாங்கம் அதன் இயலாமையை மறைக்க முற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தும் ஆயுதத்தையே மீண்டும் கையிலெடுத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் சதி அரசியலுக்குள் மக்கள் இரையாகி விடக்கூடாது என்றும்  அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

தன்னைக் கைது செய்யாமலிருப்பதற்கு அருட்தந்தை சிறில் காமினி அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் கைது செய்யப்படுவாராயின் கத்தோலிக்க மக்கள் நிச்சயம் வீதிக்கு இறங்கிக் கடும் எதிர்ப்பை வெளியிடுவர்.

இதன் மூலம் பௌத்த மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும், வேறு வழிகளில் முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும்  முரண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முயற்சிக்கிறது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.