தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்களை வறுமையில் தள்ளிய கோட்டா அரசாங்கம்: ராஜித சீற்றம்

0 77

கோட்டாபய  அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் நாட்டில் வறுமை நிலை 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

வெகுவிரைவில் முழுப் பொருளாதாரமும் சரிவடையக் கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளமையை ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.

டிசெம்பர் மாதமளவில் இந்த நிலைமையை நேரடியாக அவதானிக்க முடியும் என்றும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் எந்தவொரு ஆட்சிக் காலத்திலும் வறுமை நிலை குறுகிய காலத்திற்குள் இவ்வாறு அதிகரிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கம் என சகல ஆட்சிக் காலத்திலும் இலங்கையில் வறுமை நிலை 4.2 முதல் 4.5 சதவீதமாகவே காணப்பட்டது. ஆனால், தற்போது இது 7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அதாவது இதற்கு முன்னைய ஆட்சிக் காலங்களில் வறுமையில் வாடாத மக்களைக்கூட இந்த அரசாங்கம் வறுமைக் கோட்டுக்குள் தள்ளியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அந்நியச் செலாவணி இருப்பு அத்தியாவசியமாகும்.

ஆனால், தற்போது இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கை மத்திய வங்கியில் அந்நியச் செலாவணி இருப்பு எதிர்மறையாகக் காணப்படுகிறது. இலங்கை வரலாற்றில் இவ்வாறு இடம்பெறுவது இது முதல் சந்தர்ப்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.