தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை; தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

0 103

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்டத் தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும்  இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

 இப்போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணியின்  பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

“அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும். வரவு – செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு எதுவும் இல்லை. 
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்.” எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.