Developed by - Tamilosai
நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனால் மேற்குறித்த ஆற்றினை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.