தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வரவு – செலவுத் திட்டத்தில் பெரும் தொகை ஒதுக்கப்படும்: ஜி.எல்.பீரிஸ்

0 78

 உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் பாரிய தொகை ஒதுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை நேரில் சென்று சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த வருடத்தில் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வரவிருக்கும் வரவு  – செலவுத் திட்டம் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் பொது நலச் செயற்பாடுகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இதேநேரம், கொரோனா தொற்று அபாய நிலை குறைவதால், இலங்கையில் பல முதலீட்டுத் திட்டங்களைத் ஆரம்பிக்க ஐக்கிய இராச்சியம்  ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.