தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மகிந்தவின் பகிரங்க அறிவித்தல்

0 449

பெரும்பான்மை ஆதரவு தனக்கு இல்லாவிட்டால் தானாகவே பதவிலியிருந்து விலகுவதாக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் அறிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றப் பெரும்பான்மை எனக்கு இருக்கும் வரை என்னை யாரும் பிரதமர் பதவியிலிருந்து அகற்ற முடியாது. நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டம் நடத்தும் மக்களின் குரலிலே அவர்களது கோரிக்கை எனக்குக் கேட்கின்றது. அவை பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள்.

ஒவ்வொரு அரசு வரும்போதும் மக்கள் போராட்டங்கள் நடக்கும். மக்கள் போராட்டங்களுக்காக அரசுகள் விலகுவது என்றால் எந்த அரசும் இந்த நாட்டில் இருக்க முடியாது

ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் நடப்பது வழமை. அவற்றின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. ஆனால், அதற்காக ஜனநாயக விரோத முறையில் அரசுகளைக் கலைக்க வேண்டும் என்பதல்ல. 2015 இல் ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன்னரேயே, உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டு விட்டேன்.

Leave A Reply

Your email address will not be published.