Developed by - Tamilosai
பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைப்பதற்காக அங்கு சென்ற நிலையில், பிரதமரை வரவேற்கும் பதாகைகளை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செல்வரட்னம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.