Developed by - Tamilosai
போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -காவல்துறை எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அரச தலைவர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், அரச தலைவர் செயலகம் என்பன முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சம்பவங்களின் காணொளிக் காட்சிகளை ஆய்வு செய்த பின் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.