Developed by - Tamilosai
நீண்ட காலமாக நாவலப்பிட்டி நகரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யபட்டனர். 2880 மில்லிகிராம் ஹெரோயின் 560 மில்லிகிராம் அளவிலான கஞ்சா கைப்பற்றப்பட்டன.
நாவலப்பிட்டி, ஓவிட்ட, ஆகரஓயா ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29 தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையயில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை இன்றுவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.