தமிழ் ஓசை
தமிழ் ஓசை

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் கைது

0 29

பாணந்துறை மற்றும் ஹந்தல ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நால்வரின் பிரதான கையாட்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் உள்ள “பூகுடுகண்ண” என்ற பால சந்திரன் புஷ்பராஜ், “பும்மா” என்றழைக்கப்படும் ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, “பாணந்துறை குடு சலிந்து” என்ற சலுந்து மல்சிக்க குணரத்ன மற்றும் யோகு ஆகியோரின் உதவியாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் 4 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 40 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், கடத்தல் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 65,000 ரூபா பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.