Developed by - Tamilosai
நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் 157 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, 01 கிலோ 157 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.