ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவபலத்தை பயன்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்தப்போவதில்லை என பாதுகாப்ர் அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் வன்முறைகளுடான எழுச்சியின் போது தேசத்தை பாதுகாப்பதற்காகவும் அரசமைப்பை பி;ன்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காகவும் அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் அமைதியை ஏற்படுத்துவதற்காகவும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்தால் இராணுவம் உதவும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தேசத்தை மக்களை நேசிக்கின்ற ஆயுதப்படையினர் தார்மீக ரீதியிலான நேர்மையான சக்தி என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அமைதியாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களிற்கு புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களை அனுப்பும் – ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு அவர்களை பயன்படுத்தும் –குண்டுவெடிப்பு போன்றவற்றின் மூலம் அவர்களை தூண்டும் திட்டங்கள் உள்ளன என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆமைதியான ஆர்ப்பாட்டங்களின் போது தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பல்வேறு உள்நோக்கம் கொண்ட சக்திகள் செயற்படுகின்றன என சுட்டிக்காட்ட விரும்பும் பாதுகாப்பு அமைச்சு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் பொதுச்சொத்துக்களை தனியார் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களிற்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.