தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொலிஸாரால் 875 கிலோ மஞ்சள் பறிமுதல்!

0 114

இலங்கைக்கு இரவில் கடத்துவதற்காக மண்டபம் அருகே வீட்டில் பதுக்கியிருந்த 875 கிலோ மஞ்சளை பொலிஸார் பறிமுதல் செய்துள்னர்.

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த மஞ்சள் மூடைகள் பதுக்கி வைத்திருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி, வேதாளை தென் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் பொலிஸார் துரித சோதனை நடத்தினர்.

அங்கு ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த தலா 35 கிலோ வீதம் 25 மூடைகளில் 875 கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்துள்ளது.

குறித்த மஞ்சள் மூடைகளை பறிமுதல் செய்து மண்டபம் காவல் நிலைத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், இது தொடர்பாக முகமது அலி ஜின்னா என்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்த மஞ்சளின் சர்வதேச மதிப்பு இந்திய பெறுமதியில் ரூ.3.75 லட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.