Developed by - Tamilosai
இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் அப்பட்டமான பொய்யானதும் முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் உறுதியாக நிராகரிப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்தியிடலை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.