Developed by - Tamilosai
சமுர்த்தித் திட்டத்தை பெறும் மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், அதைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
இம்முறை பாதீட்டில் 17 இலட்சத்து 93 ஆயிரத்து 533 சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களுக்கென 50 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கான எதிர்பார்ப்புப் பட்டியலில் பெருமளவினர் காத்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.
எனவே, தற்போது நடைமுறையிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் பட்டியலை மீளாய்வுக்கு உட்படுத்துவது நல்லதென நினைக்கின்றேன்.
இதேநேரம் உலகளாவிய அனர்த்தம் காரணமாக வாழ்வாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் போன்றோருக்கான சலுகைகள், நிவாரணங்கள் போன்ற செயற்திட்டங்கள் பெரிதும் வரவேற்கத்தக்க திட்டங்களாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.