தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொருளாதார மேம்பாட்டை முன்னெடுப்பது எப்படி? பிள்ளையான் விளக்கம்

0 86

பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி விசேடமாக மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு சம்பந்தமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கும் நீரியல் பூங்கா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக எங்கள் மாவட்டத்தில் இருக்கும் மீன், நண்டு, இறால் வளர்க்கக்கூடிய இடங்களை சரியாக அடையாளப்படுத்தி, முயற்சியுள்ள மக்களுக்கு அவற்றைப் பகிர்ந்தளித்து, அதேபோன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவழைத்து முதலீட்டை அதிகரித்து, இதன் ஊடாக வேலை வாய்ப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.