தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்து உருவாகியுள்ளது

0 18

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்து உருவாகியுள்ளது என்று உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.

நச்சுக் கலவையான விலைவாசி உயர்வு பயிர் விளைச்சல் குறைதல் உக்ரைன் போரின் வீழ்ச்சி மற்றும் முக்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த அரசாங்கத்திடம் நிதி பற்றாக்குறை என்பன உணவு பற்றாக்குறைக்கான காரணங்கள் என்று அவர் விபரித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது மற்றும் எரிபொருள் உணவு மற்றும் உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தேவையான பணம் இல்லை என்று குறிப்பிட்ட அவர் நன்கொடையாளர்களின் ஆதரவை வலியுறுத்தியுள்ளார்.

உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் சமீபத்திய மதிப்பீட்டின்படி இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் – அதாவது மொத்த சனத்தொகையில் 30 சதவிகித மக்கள் – உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.

இலட்சக்கணக்கான குடும்பங்கள் அரிசி போன்ற முக்கிய உணவுப் பொருட்களைக் கூட வாங்க முடியாத வகையில் 90 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் இலங்கை போராடி வருகிறது.

2018ஆம் ஆண்டிலிருந்து போசனைமிக்க உணவின் சராசரி மாதச் செலவு 156 சதவீதம் உயர்ந்துள்ளது.

எனவே அவசர தலையீடு இல்லாமல் 22 மில்லியன் மக்கள்தொகைக்கு உணவளிக்கும் திட்டங்கள் இருண்டதாகவே இருப்பதாக சித்தீக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.