Developed by - Tamilosai
தேசிய பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுகளை தற்போது நாட்டில் காணக்கூடியதாக உள்ளது.
இதன் தாக்கம் 2022 ஆம் ஆண்டில் இரட்டிப்பாகக் காணப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
பொருளாதார சவால்களைக் கணிப்பிட்டு சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய நிலையில் இலங்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு தேசிய பொருளாதார சவால்களை முகாமைத்துவம் செய்ய இயலாமையின் வெளிப்பாடுகளையே இன்று நாட்டில் காண்கின்றோம்.
பொருளாதார முகாமைத்துவத்தில் அரசாங்கம் தோல்வியைக் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் இந்த இயலாமையை புரிந்துக்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.