தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொருட்களின் விலை அதிகரிப்பு; அரசாங்கத்திற்கு எதிராக புதுக்குடியிருப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

0 65

நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தைக் கண்டித்து முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும், பொதுமக்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று காலை 9 மணியளவில் புதுக்குடியிருப்பு நகரப்பகுதியிலிருந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறும் மாட்டு வண்டிலில் அதிகரித்த விலைக்குரிய பொருட்கள் சிலவற்றை ஏற்றியவாறும் குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாட்டில் அதிகரித்துள்ள சமையல் எரிவாயு விலை, சீனி விலை, சீமெந்து விலை உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு எதிராகவும் குறித்த கவனயீரப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ஏற்றாதே எற்றாதே பொருட்களின் விலையை ஏற்றாதே, அடிக்காதே அடிக்காதே ஏழை வயிற்றில் அடிக்காதே, அடிக்காதே அடிக்காதே காசுகளை அடிக்காதே, விற்காதே விற்காதே நாட்டை விற்காதே” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வரை பேரணியாகச் சென்றனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளரிடம்  மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.