Developed by - Tamilosai
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கியுள்ளார்.
அதன்படி நெருக்கடிகளை சமாளிப்பதற்கு மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், வாகனங்களுக்கு தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் எரிபொருள் பாவனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. நெருக்கடிகளை சமாளிப்பதற்கு மக்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
வாகனங்களுக்கு தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஏனையவர்களுக்கும் தேவையான அளவு எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும்
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அந்நிய செலாவணி பிரச்சினையே காரணம் என்பதால் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி ஏற்படும்.
அனைத்து நெருக்கடிகளுக்கும் அரசாங்கம் மட்டும் பொறுப்பேற்க முடியாது. நாட்டு மக்கள் வரிசையில் காத்திருந்ததற்கு அனைத்து அமைச்சர்களும் பொறுப்பு.
தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.