தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொதுமகனை தாக்கிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணை

0 234

 மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் இருவரை தாக்கும் வகையிலான காணொலி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தொன்று இடம்பெற்ற இடத்தில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்த போது அவ்வழியாக அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துள்ளது.

இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை பின் தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி உணவகம் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிளை கண்டு பிடித்துள்ளனர். 

பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது தொலைபேசியில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.