Developed by - Tamilosai
பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் பொடி லெசி எனப்படும் ஜனித் மதுசங்கவின் தாய் ஐக்கிய நாடுகள் அமைப்பில் தமது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்க ஹம்டியிடம், பொடி லெசியின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் திகதி பொடி லெசி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொடி லெசி தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந் நிலையில், எதிர்வரும் 16ம் திகதியுடன் லெசியின் தடுப்புக் காவல் காலம் பூர்த்தியாவதாகவும் அதன் பின்னர் அவரை பெஹலியகொட குற்ற விசாரணைப் பிரிவிற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என லெசியின் தாய் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் தமது மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அச்சம் கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாதாள உலகக் குழு உறுப்பினர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக இது குறித்து கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோருவதாகவும் கைதிகள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.