தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொசன் போயாவை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை

0 21

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அபராதம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக 141 கைதிகளையும், 14 நாட்கள் குறைக்கப்பட்டதால் 32 கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அநுராதபுரம், களுத்துறை, கொழும்பு மகசின் சிறைச்சாலை, தல்தெனை, வடரெகா, பதுளை, மாத்தறை மற்றும் அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். 

இதேவேளை, பொலன்னறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேனை, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகல மற்றும் திருகோணமலை சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.