Developed by - Tamilosai
பொகவந்தலாவ – கெல்பியன் தோட்டத்தில் 11 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவின் அபாயம் காரணமாக நான்கு குடும்பங்களை சேர்ந்த 22பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தோட்ட உத்தியோகத்தர்களின் வீடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் 11 சிறுவர்கள் , 06 ஆண்கள் மற்றும் 05 பெண்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.