Developed by - Tamilosai
அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் தனது வழக்கமான உடல்நிலை பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதால் துணை அரசதலைவர் கமலா ஹாரிஸிடம் தனது அதிகாரங்களை தற்காலிகமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமெரிக்க அரசியல் வரலாற்றில் பெண் ஒருவர் அரச தலைவருக்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்வது இதுவே முதல்முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் மற்றும் அணுஆயுத அதிகாரங்கள் தற்காலிகமாக கமலா ஹாரிஷ் வசமாகியுள்ளது.
“இந்த நேரத்தில் துணை அரச தலைவர் மேற்கு விங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவார்” என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
57 வயதான திருமதி ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் – மற்றும் முதல் கறுப்பின மற்றும் தெற்காசிய அமெரிக்கர் ஆவார்.