Developed by - Tamilosai
கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான பேக்ஸ்லோவிட்’ Paxlovid என்னும் மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 10 மில்லியன் கொரோனா மாத்திரைகளை 5.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது இலங்கையில் ஒரு மாத்திரையின் விலை ரூபா மதிப்பில் சுமார் 107,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் ஒரு மாத்திரையின் விலை 39, 378 ரூபாய் ஆகும்.
‘பேக்ஸ்லோவிட்’ Paxlovid என்னும் இந்த மாத்திரையானது, வைத்தியசாலைகளில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான கொரோனா பாதிப்புக்கு நிவாரணம் அளிக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.