Developed by - Tamilosai
வௌிநாட்டில் இருந்து டொலர் பார்சல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து சந்தேகநபரால் குறித்த பெண்ணிடம் இருந்து 129,000 ரூபாய் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் மூலம் பெண்ணொருவருடன் நட்பாகப் பழகி பணம் மோசடி செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயது சந்தேக நபர் நுகேகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்
கணனி குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸை பிரதேசத்தில் ஆடை தொழிலில் தான் ஈடுபட்டு வருவதாக சந்தேகநபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.