தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பேருந்து குடைசாய்ந்ததில் 14 பேர் காயம்: சாரதி கைது

0 159

 மாத்தளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை களுபாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் 14 பேர் காயமடைந்தனர்.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி வயல் நிலம் ஒன்றில் குடைசாய்ந்தது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் 35 பேர் இருந்ததாகவும் அவர்களில் 14 பேர் காயங்களுக்குள்ளாகி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காயமடைந்தவர்களுள் 3 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.