Developed by - Tamilosai
எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் குறைந்தபட்சம் டீசல் விலையிலாவது அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்துக் கட்டணமும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் எரிபொருள் விலை தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில எவ்வித தீர்மானத்தை எடுப்பார் என்று தனக்குத் தெரியாது எனவும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.