Developed by - Tamilosai
மிரிஹான பங்கிரிவத்தை வீதியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பத்தை ஏற்படுத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) மேற்கொண்டு வருகின்றது.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நாடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, குறித்த சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொண்ட சிசிரிவி காட்சிகளுக்கு அமைய, பேருந்துக்கு தீ வைத்தவர் போன்ற தோற்றத்தில் இருக்கும் நபரின் படத்தையும் பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்