தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞனுக்கு மறியல்

0 65

முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு கிலோ 800 கிராம் கேரளக் கஞ்சாப் பொதியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முல்லைத்தீவு பகுதியிலிருந்து திருகோணமலைக்கு அனுமதிப்பத்திரமின்றி ஒரு கிலோவும் 800 கிராம் கஞ்சா பொதியை பயணிகள் பேருந்தில் கொண்டு செல்வதாக புல்மோட்டை போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.