Developed by - Tamilosai
துருக்கி மற்றும் டுபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு பேக்கரி வர்த்தகர்களுக்கு வர்த்தக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பாண் மற்றும் மா அடிப்படையிலான பொருட்களை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.