தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பெற்றோல் டேங்கர் வெடித்து 91 பேர் பலி!

0 99

 ஆபிரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள லியோனின் தலைநகரில் இன்று பெற்றோல் நிரப்பு நிலையத்தில் டேங்கர்  லொறி மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 91 பேர் பலியாகியதாகவும் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோல் நிரப்பு நிலையம் அருகே நடந்த இந்த விபத்தால் தீப்பிடித்து அங்குள்ள பெற்றோல் சேமிப்புக் கிடங்கு வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என அந்நாட்டு ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ தெரிவித்துள்ளார்.

 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக தமது அரசாங்கம்  அனைத்தையும் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.