தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை – கெஹெலிய ரம்புக்வெல

0 437
பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடியுள்ளனர் சிறந்த நோக்கங்களிற்காக இல்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.ஆர்ப்பாட்டங்களிற்காக கூடியுள்ள இளைஞர்களின் நோக்கங்கள் குறித்து கேள்விகள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் முக்கியமற்ற ஒன்றுகூடல்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என காண்பிப்பதே எதிர்கட்சியின் கடமை என தெரிவித்துள்ள அவர் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையேற்பட்டால் தாங்கள் எதிர்கட்சியை நோக்கி செல்லவும் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டா கோ ஹோம் என்பதன் அர்த்தம் உள்ளடக்கம்; குறித்து கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சிபொறுப்பை யார் ஏற்பது போன்ற விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எந்த அரசியல்வாதியும் நாட்டை வேண்டுமென்றே வங்குரோத்து நிலைக்கு தள்ளப்போவதில்லை தவறுகள் இடம்பெற்றுள்ளன அதனை திருத்துவதற்கு அரசாங்கம் முயல்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி கட்டமைப்பு இல்லாமல் நாட்டை பின்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் போல இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் அர்த்தபூர்வமானவையாக காணப்படவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave A Reply

Your email address will not be published.