Developed by - Tamilosai
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று (27 -10- 2021) நிறைவுக்கு வந்தது.
குறித்த வழக்கு கொழும்பு பதில் நீதிவான் சஞ்சய கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக மூவரடங்கிய விசேட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இதனால் அவர்களுக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதிவான் குறித்த வழக்கு விசாரணைகளை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.