Developed by - Tamilosai
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிக்கை இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் வாசிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.