தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புஷ்பா-2 படத்தில் களம் இறங்கும் சாய் பல்லவி

0 46

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தில் சாய்பல்லவியின் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தன.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடி இன பெண் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சாய் பல்லவி நடித்த முந்தைய படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளதால் அவரிடம் பழங்குடி பெண்ணாக நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Leave A Reply

Your email address will not be published.