Developed by - Tamilosai
இன்று தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்கின்றது.கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பு தினமான இன்றும் 6 ஆவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டு போராட்டம் தொடர்கின்றது.போராட்ட களத்தில் புதுவருட நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது.
பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.