தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு!

0 61

இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில்  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் திருவிழாக்கள், சூரசம்ஹாரம் உள்ளிட்டவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதேபோன்று, திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் இரவு நேர ஊரடங்கு  11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமுலிலுள்ள போதிலும் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.