தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது

0 431

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றத்திற்கு பயன்படுத்திய வாள் மற்றும் கொள்ளையிப்பட்ட நகைகள் என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களையே புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கடந்த 16 ஆம் திகதி தேவிபுரம் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வயோதிப தம்பதிகளை காயப்படுத்தி விட்டு தாலியினை கொள்ளையடித்து சென்றமை மற்றும் விசுவமடு பகுதியில் செயின் பறிப்பு, புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நகை கொள்ளை என வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு கொள்ளையிட்ட சம்வங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொள்ளையிட்ட தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருவதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
கொள்ளையிடப்பட்ட நகைகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனையினை மேற்கொண்ட பெண் ஒருவர் உள்ளிட்ட 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.