Developed by - Tamilosai
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எரிவாயு சிலிண்டர்கள் குறைவான அளவில் காணப்படுவதனால் எதிர்காலத்தில் பங்கீட்டு அட்டை முறை மூலம் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
நேற்று மற்றும் இன்றைய தினம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின் போது தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் இடம்பெற்றமையினால் சில நடைமுறைச் சிக்கல்களை தவிர்த்து எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமையளிப்பதற்காக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகம் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாகவும் சில முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் எங்களுக்கு முறையிட்டுள்ளனர். இவற்றை தவிர்க்கும் வகையில் பங்கீட்டு அட்டை நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.