Developed by - Tamilosai
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருபவர்கள் அந்நாடுகளில் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்கத் தேவையில்லை என்று வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலின் மூலம் புதிய பிறழ்வுகள் மிக இலகுவாக நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே, இந்தத் தீர்மானம் துரிதமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சுகாதாரத் தொழில் வல்லுநர்கள் கல்வியகத்தின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு நடமாடும் இரசாயன ஆய்வு கூடங்களை எமக்கு வழங்கினால் சகல மாவட்டங்களுக்கும் சென்று பாடசாலைகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் எழுமாற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த கொரோனா அலை உருவாகக் கூடிய அபாயம் எங்கிருக்கிறது என்று இலகுவாகக் கண்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.