Developed by - Tamilosai
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது
முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கரவர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும் விரும்பும் மகன்! பிரகாஷ்ராஜ் சுந்தர சோழராகவும், ஜெயசித்ரா செம்பியன் மாதேவியாகவும் மற்றும் ரஹ்மான் மதுராந்தகனாகவும் நடித்திருப்பதாக என்று தெரிவித்து சிறிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.