தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புதிய அரசமைப்பு –வரைவு நகல் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0 217

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைவொன்றை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நிபுணர்கள் குழு அப்பணியை நிறைவு செய்துள்ளது. கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக்குழுவானது தனது வரைவினை இறுதி செய்துள்ளது. இந்த வரைபில் அரசியல் கட்சிகளினால் முன்னொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் உள்ளடக்கத்தில் உள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த வரைவின் சில உள்ளடக்கங்கள் தொடர்பில் வரைவைத் தயாரிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு காணப்படாத போதும் அவையும் உள்ளீர்க்கப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குறித்த வரைவினை நிபுணர்கள் குழு வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இது வரையில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடுகள் எவையும் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இதேநேரம், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஏப்ரலில் புதிய அரசியலமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.