Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் – புங்குடுதீவுப் பகுதியில் மக்களின் காணியைச் சுவீகரிக்கும் முயற்சியில் கடற்படை ஈடுபட்டுள்ளது.
கடற்படையின் தேவைக்காக வல்லன் பகுதியில் சுமார் 14 ஏக்கர் காணியை சுவீகரிப்பிற்காக இன்று திங்கட்கிழமை அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை நாளை புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட வீதியை அண்மித்ததாக அமைந்துள்ள காணியொன்றும் கடற்படையினரின் முகாம்கள் அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ளது.
கடந்த காலத்தில் இரண்டு தடவைகள் இக்காணிகளைக் கடற்படையினர் சுவீகரிக்க முயன்ற போதிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெறவுள்ள நிலையில் அதனைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றுகூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.