தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புகையிரத விபத்து – யானைகள் உயிரிழப்பு

0 61

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற புகையிரதத்துடன் காட்டுயானைகள் நேற்றிரவு மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது.

ஹபரனை பொலிஸ் பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

புகையிரதத்தில் மோதுண்டு இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளது.

குறித்த விபத்து காரணமாக கொழும்பு – ஹபரனைக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.