தமிழ் ஓசை
தமிழ் ஓசை

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை இயந்திர பொறியியல் முற்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்காணிப்பு

0 471

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான இரத்மலானை இயந்திர பொறியியல் முற்றத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இலங்கை ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்புகளை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் செயலாளருக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

ரயில் இன்ஜின்கள், பெட்டிகள் மற்றும் கல் உள்ளிட்ட பிற இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதன் மூலம் வழக்கமான ரயில் சேவையை பராமரிக்கும் நோக்கத்துடன் 1933 ஆம் ஆண்டில் இயந்திர பொறியியல் யார்ட் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.