Developed by - Tamilosai
உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு புகையிரத தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படாததால் அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளதாக குறித்த சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்துத் துறைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவையை ஆரம்பிக்காதது பிரச்சினைக்குரிய நிலை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.